சேலம் மாநகராட்சி பகுதிகளில் 65 டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு-மாலை 6 மணிக்கு மூட உத்தரவு


சேலம் மாநகராட்சி பகுதிகளில் 65 டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு-மாலை 6 மணிக்கு மூட உத்தரவு
x
தினத்தந்தி 10 Aug 2021 4:04 AM IST (Updated: 10 Aug 2021 4:04 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 65 டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு-மாலை 6 மணிக்கு மூட உத்தரவு

சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள் மாலை 6 மணிக்கு மூட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும். ஜவுளி மற்றும் நகைக்கடைகளில் குளிர்சாதன வசதி (ஏ.சி.) பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு முறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் அறிவுரைப்படி மாநகராட்சி பகுதியில் மட்டும் உள்ள 65 டாஸ்மாக் கடைகள் திறந்து இருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் புதிய கட்டுப்பாடுகளின்படி வருகிற 23-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும். சரியாக 6 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story