பெரியநாயக்கன்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது
தினத்தந்தி 10 Aug 2021 8:49 AM IST (Updated: 10 Aug 2021 8:53 AM IST)
Text Sizeபெரியநாயக்கன்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை,
பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள தேவையம்பாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (வயது 32), பிரபு (38), சதீஷ்குமார் (33), பிரகாஷ் (37), சுரேஷ் (32), அருண்குமார் (28) உள்பட 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.31 ஆயிரத்து 960-யை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire