15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 4:27 AM GMT (Updated: 10 Aug 2021 4:27 AM GMT)

திருவள்ளூரில் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள உழவர் சந்தை அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கஜேந்திரன், சீனிவாசன், ராஜேந்திரன், சுப்பிரமணி, நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டு விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களையும், மின் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளை தனியார் மயமாக்குவதை நிறுத்த வலியுறுத்தியும், பெட்ரோல்-டீசல் சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

திருத்தணி நகராட்சி எதிரில் இந்திய தொழிற்சங்க மையம், சி.ஐ.டி.யு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் இணைந்து இணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் உள்ளிட்டவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story