நடிகர் டி.ராஜேந்தர் தோட்டத்தில் 7 அடி நீள உடும்பு சிக்கியது - கிண்டி வனத்துறையினர் மீட்டனர்


நடிகர் டி.ராஜேந்தர் தோட்டத்தில் 7 அடி நீள உடும்பு சிக்கியது - கிண்டி வனத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 10 Aug 2021 1:01 PM IST (Updated: 10 Aug 2021 1:01 PM IST)
t-max-icont-min-icon

ஆலந்தூர் அருகே நடிகர் டி.ராஜேந்தர் தோட்டத்தில் 7 அடி நீள உடும்பை கிண்டி வனத்துறையினர் மீட்டனர்.

ஆலந்தூர்,

பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டம் போரூரில் உள்ளது. இந்த தோட்டத்தை டி.ராஜேந்தரின் மனைவி உஷா சுத்தம் செய்தார். அப்போது காடுகளில் இருக்க கூடிய பெரிய வகை உடும்பு ஒன்று இவரது தோட்டத்தில் நகர முடியாமல் பரிதவித்தபடி இருந்ததை கண்டார். உடனடியாக அவர், கிண்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். 

கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் உத்தரவின்பேரில் வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று டி.ராஜேந்தருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த சுமார் 7 அடி நீளம் உள்ள உடும்பை மீட்டு, கிண்டி வன அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

சுமார் 5 வயது கொண்ட அந்த உடும்பின் வயிற்று பகுதி மட்டும் பெரியதாக இருப்பதால் அது கர்ப்பமாக இருக்கலாம். இது பற்றி வனத்துறை டாக்டர்களுக்கு தகவல் தரப்பட்டு உள்ளது. அவர்கள் பரிசோதனை செய்த பிறகே முழு விவரமும் தெரிய வரும் என வனத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story