தூத்துக்குடியில் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது


தூத்துக்குடியில் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 6:17 PM IST (Updated: 10 Aug 2021 6:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஏ.டி.எம்.கார்டை திருடி பணம் எடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி நடராஜபுரத்தை சேர்ந்தவர் கில்டா (வயது 44). இவருடைய உறவுக்கார பெண் ஜெனிலா (19). இவர் அடிக்கடி கில்டா வீட்டுக்கு சென்று வந்தாராம். இந்த நிலையில் கில்டாவின் ஏ.டி.எம். கார்டை, நைசாக ஜெனிலா திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனை தனது நண்பர் அஸ்வந்த் (20) என்பவரிடம் கொடுத்து உள்ளார். அதனை பயன்படுத்தி அஸ்வந்த் ரூ.17 ஆயிரம் பணத்தை எடுத்து உள்ளார்.
இதனை அறிந்த கில்டா தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்கு பதிவு செய்து ஜெனிலா, அஸ்வந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story