முத்துப்பேட்டை அருகே கூரை வீட்டில் தீ விபத்து 2 மோட்டார் சைக்கிள்கள் நாசம்


முத்துப்பேட்டை அருகே கூரை வீட்டில் தீ விபத்து 2 மோட்டார் சைக்கிள்கள் நாசம்
x
தினத்தந்தி 10 Aug 2021 6:58 PM IST (Updated: 10 Aug 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே கூரை வீட்டில் நடந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை அருகே கூரை வீட்டில் நடந்த தீ விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமாயின.

கூரை வீட்டில் தீ

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை மேலக்காடு கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மனைவி தனலட்சுமி (வயது61). இவர் நேற்று மதியம் தனது பேரனுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய கூரை வீட்டின் மேல்புறம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவி அருகே இருந்த அமிர்தபாண்டியன் என்பவருடைய வீட்டு மாட்டு கொட்டகையும் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதை அறிந்த முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் தனலட்சுமியின் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. வீடடின் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், அருகில் இருந்த அமிர்தபாண்டியன் வீட்டு மாட்டு கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிதி உதவி

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முத்துப்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் காத்தையன் ஆகியோர் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். அதேபோல் ஜாம்புவானோடை ஊராட்சி மன்றம் சார்பில் ஊராட்சி தலைவர் லதா பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம் ஆகியோர் ரூ.5 ஆயிரம் நிதி உதவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர்.

Next Story