நாசரேத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


நாசரேத்தில்  வேலை கிடைக்காத விரக்தியில்  வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Aug 2021 7:12 PM IST (Updated: 10 Aug 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாசரேத்:
நாசரேத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வாலிபர்
 நாசரேத் கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி பட்டு. வேல்முருகனுக்கும் அவரது மனைவி பட்டுவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பட்டு நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் அஜித் (வயது 19) தாய் பட்டுவுடன் வசித்து வந்தாா். இவர் 10-ஆம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். 
தூக்கு போட்டு தற்கொலை
கொரோனாவை முன்னிட்டு அவர் அங்கு வேலை இல்லாமல் தனது சொந்த ஊரான நாசரேத்திற்கு வந்துள்ளார். கடந்த 7 மாதமாக வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். பல இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்றவுடன் வீட்டின் கதவை பூட்டி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
இதுகுறித்து நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் நாசரேத் போலீசார்,  அஜித்தின் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.


Next Story