தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி டிரைவர் பலி


தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 10 Aug 2021 8:16 PM IST (Updated: 10 Aug 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி டிரைவர் பலி

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் ஸ்ரீநி நகரை சேர்ந்தவர் சுடலை மணி (வயது 38). லாரி டிரைவர். இவருக்கு மது குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வரவில்லை. இந்த நிலையில் சுடலைமணி கோரம்பள்ளம் குளத்தில் மூழ்கி இறந்து கிடப்பதாக புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று குளத்தில் மிதந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சுடலைமணி குளத்தில் தவறி விழுந்து இருந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story