விருத்தாசலம் இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் நேரில் ஆய்வு
ஆய்வு
விருத்தாசலம்,
விருத்தாசலம் இலங்கை அகதிகள் முகாமில் சென்னை அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரி கோவிந்தசாமி, புள்ளியியல் ஆய்வாளர் முருகன், கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள், முகாமில் தங்கியுள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது அங்கு வசிப்பவர்கள் சேதமடைந்துள்ள வீடுகளை சீரமைப்பதோடு, பழைய மின் வயர்களை மாற்றி விட்டு புதிய வயர்களை பொருத்த வேண்டும். தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதோடு, கழிப்பறை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை நிறைவேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். முன்னதாக சென்னை அகதிகள் மறுவாழ்வு துறை அதிகாரிகள், முகாமில் தங்கி உள்ளவர்களிடம் கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். ஆய்வின்போது விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மாயக்கண்ணன், கியூ பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story