மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:24 PM IST (Updated: 10 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று முன்தினம் காலை அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத்தை சீரழிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரித்து ரூ.600 கூலி வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை துணைத்தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முத்துக்குமரன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி, மின்வாரிய தொ.மு.ச. பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், பொருளாளர் ஜான்போஸ்கோ, அமைப்பு செயலாளர் வேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் அழகுநாதன் உள்பட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story