ரோட்டில் கொட்டிக்கிடந்த காலாவதியான குளிர்பானங்கள்
ரோட்டில் கொட்டிக்கிடந்த காலாவதியான குளிர்பானங்கள்
பொள்ளாச்சி
ஆனைமலை அடுத்த தாத்தூர்அரசு பள்ளிக்கு எதிரில் மர்ம நபர்கள் சுமார் 450 காலாவதியானகுளிர்பான பாட்டில்களை ரோட்டில் கொட்டிச்சென்றுள்ளனர். அந்த பாட்டில்களில் தயாரித்த தேதி இல்லாமலும், சிலபாட்டில்களில் தயாரித்த தேதி அழிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்துவருவாய் துறையினர்கூறிய தாவது:-காலாவதியான குளிர்பான பாட்டில்கள் வீசிய நபர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். குளிர்பான பாட்டில்கள் தயாரிக்கும நிறுவனத்திடம்பேசியுள்ளோம்.அருகில் உள்ள குளிர்பானவிற்பனைகடைகள் மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலும்இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பள்ளி திறக்கப்படவில்லை. பள்ளி திறக்கப்பட்டுஇருக்கும் நிலையில் காலாவதியான குளிர்பானங்கள் கொட்டப்பட்டு இருந்தால்அதன் விபரீதம் தெரியாமல் மாணவ, மாணவிகள்எடுத்து பருகி இருந்தால் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பர்.
இனி இதுபோன்ற சட்டவிரோத செயல் நடைபெறாமல் இருக்க போலீசார், வருவாய் மற்றும்சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில்ஈடுபடவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story