திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி விதைகள் விற்றால் ஜெயில் தண்டனை. அதிகாரி எச்சரிக்கை


திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி விதைகள் விற்றால் ஜெயில் தண்டனை. அதிகாரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Aug 2021 10:32 PM IST (Updated: 10 Aug 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி விதைகள் விற்றால் ஜெயில்தண்டனை கிடைக்கும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.

திருப்பத்தூர்

விழிப்புணர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளர்களுக்கு பருத்தி குறித்த விழிப்புணர்வு கூட்டம், பயிற்சி விதைச் சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை சார்பில் கந்திலி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. பயிற்சிக்கு விதை ஆய்வாளர் சுமதி (குடியாத்தம்) தலைமை தாங்கினார். விதை ஆய்வாளர் கவுதமி (வேலூர்) வரவேற்றார்.  வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ராஜசேகர், விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு ஆகியோர் பயிற்சியளித்தனர்.

அப்போது இணை இயக்குனர் ராஜசேகர் பேசியதாவது:-

சிறைத்தண்டனை

மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தாங்கி வளரக்கூடிய பருத்தி ரகங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறினால் விதை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். அதிக முளைப்புத் திறன் மற்றும் இனத்தூய்மை கொண்ட நல்ல விதைகள் விவசாயிகளுக்கு கிடைப்பதற்கு விதை விற்பனையாளர்களின் பங்கு மிக முக்கியமானது. விதை விற்பனை செய்வதற்கு முறையாக உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இன்றி மற்றும் காலாவதியான உரிமத்துடன் விதை விற்பனை செய்பவர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

விதை மாதிரி அனுப்பி பரிசோதனை முடிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்கும் விதைகளை மட்டும் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 முடிவில் விதை ஆய்வாளர் முருகன் (திருவண்ணாமலை) நன்றி கூறினார்.

Next Story