பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 ஆயிரம் திருட்டு
தோகைமலை அருகே பாதிரியார் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.26 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தோகைமலை
தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட கல்லடை ஊராட்சி கீழவெளியூர் அருகே உள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 64).
பாதிரியார்
பாதிரியாரான இவர் கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தாருடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் தங்கவேல் தனது குடும்பத்தாருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.26 ஆயிரம் மற்றும் டம்ளர், கிண்ணம் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் அள்ளி சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் பாதிரியார் தங்கவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டன.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story