ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்
ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம்
குடியாத்தம்
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மூலவர் கெங்கையம்மன் ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கோவில் வளாகத்தில் மூகாம்பிகை சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த கெங்கையம்மன், மூகாம்பிகையை தரிசிக்க வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றியும் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, நாட்டாமை சம்பத், தர்மகர்த்தா பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் கார்த்திகேயன் உள்பட விழாக்குழுவினர், அப்பகுதி இளைஞர் அணியினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
----
Related Tags :
Next Story