குடகனாறு அணையில் தண்ணீர் திறப்பு
வேடசந்தூர் அருகே உள்ள குடகனாறு அணையில் ஷட்டர்களில் பழுது நீக்கும் பணிக்காக, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
வேடசந்தூர் :
வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் உள்ள ஷட்டர்களில் பழுது ஏற்பட்டால் முழுமையாக தண்ணீர் இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அணையின் ஷட்டர்களை பழுது நீக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, ஷட்டர்களில் உள்ள பழுதை நீக்க ரூ.6 கோடியை அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த அணையின் மொத்தம் உயரம் 27 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 11 அடியாக உள்ளது.
இதனையடுத்து ஷட்டர்களை பழுது பார்க்கும் பணிக்காக, அணையில் உள்ள தண்ணீரை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று நங்காஞ்சியாறு செயற்பொறியாளர் கோபி, குடகனாறு உதவி பொறியாளர் முருகன் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் ஒரு ஷட்டர் வழியாக தண்ணீரை திறந்து விட்டனர்.
அதில் வினாடிக்கு 96.53 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் 5 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். அதன் பின்னர் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, ஷட்டர்கள் பழுது பார்க்கும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story