2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கடந்த 6-8-2010-ந் தேதியன்று விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விருதுநகர் அல்லம்பட்டிமுக்கு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 105 ரேஷன் அரிசி மூடைகள் இருந்தன. ஒவ்வொரு மூடையும் தலா 50 கிலோ எடை கொண்ட நிலையில் மொத்தம் 5.25 டன் அரிசி இருந்தது. போலீசார், வேனில் இருந்த திருமங்கலத்தை சேர்ந்த அமானுல்லா (வயது55) என்பவரிடம் விசாரித்தபோது அவர் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதை ஒப்புக்கொண்டார். மேலும் கோழி தீவனத்திற்கு அதிக விலைக்கு விற்பதற்காக ரேஷன் அரிசி கடத்தல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்ததுடன் அமானுல்லாவையும் வேன் டிரைவர் திருமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் (35) என்பவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விருதுநகர் முதல்-மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட அமானுல்லா, ரமேஷ் ஆகிய 2 பேருக்கும் தலா 2 வருட ஜெயில் தண்டனையும், தலா ரூ. 2ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story