சோளப்பயிர்களை தின்று தீர்க்கும் மயில்கள்


சோளப்பயிர்களை தின்று தீர்க்கும் மயில்கள்
x
சோளப்பயிர்களை தின்று தீர்க்கும் மயில்கள்
தினத்தந்தி 10 Aug 2021 11:13 PM IST (Updated: 10 Aug 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

சோளப்பயிர்களை தின்று தீர்க்கும் மயில்கள்.

நெகமம்,

நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கம்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், தட்டைப்பயிர் போன்ற பல பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த பகுதிகளில் தற்போது விதைக்கப்பட்டுள்ள விதைகள் முளைப்பதற்கு முன்பாகவே மயில்கள் மற்றும் காகம் போன்றவை உணவாக்கிக் கொள்கிறது. மேலும் பயிர்கள் முளைக்காமல் வீணாகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது.சில நேரங்களில் முளைத்த பயிர்களையும் மயில்கள் சேதப்படுத்தி விடுகிறது.

 நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது வளர்ந்து சோளம் விளைந்து உள்ளது.
 பயிர்கள் வளர்ந்த நிலையில் தற்போது அதிகளவில் காற்று வீசிவருவதால் சோளப்பயிர் தட்டுகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து உள்ளது. சாய்ந்து உள்ள நிலையில் சோளப்பயிரை தின்பதற்கு மயில், கிளி மற்றும் குருவிகள் அதிகளவில் வந்து அதை சேதப்படுத்தி வருகிறது. இதில் மயில்கள் அதிகளவில் பயிர்களை தின்று தீர்ப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:-

பொதுவாக பூச்சி, புழு உள்ளிட்ட சிற்றுயிர்கள் முதல் நரி, கீரி உள்ளிட்ட உயிர்கள் வரை ஒரு வாழ்க்கை சங்கிலி தொடர் உண்டு. அதாவது விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் புழு, பூச்சிகளை ஓணான், தவளை உள்ளிட்ட உயிரினங்கள் உணவாக்கிக் கொள்ளும். 

பின்னர் இந்த தவளை உள்ளிட்ட உயிரனங்களை பாம்பு போன்ற உயிரனங்கள் உணவாக்கும். அவற்றை மயில் போன்ற பறவைகள் உணவாக்கிக் கொள்ளும். இதே போல பூச்சி, புழுக்களை உணவாக்கும் மயில் உள்ளிட்ட பறவைகளை நரி போன்ற உயிரனங்கள் உணவாக்கும்.
இத்தகைய வாழ்க்கை சங்கிலி எங்கோ ஒரு இடத்தில் அறுந்து போகும் போது பல பிரச்சினைகள் உருவாகிறது. அந்த வகையில் பயிர்களில் உருவாகும் பூச்சி, புழுக்களை ரசாயன முறையில் அழிக்கும் போது பறவைகளுக்கு உணவு கிடைக்காமல் தானியங்களை அழிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது.

 மற்ற பறவைகளைப் போல மயில்களை கற்களை கொண்டு வீசி விரட்ட முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் எதிர்பாராமல் மயில்கள் மீது கற்கள் பட்டு அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அது குற்றமாகிவிடும். எனவே மயில்களிடமிருந்து பயிர்களை பாதுகாப்பது சிரமமாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

Next Story