திருச்செங்கோட்டில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்


திருச்செங்கோட்டில் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை-கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்
x
தினத்தந்தி 10 Aug 2021 11:16 PM IST (Updated: 10 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் நடந்த சிறப்பு முகாமில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

எலச்சிபாளையம், ஆக.11-
சிறப்பு முகாம்
திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர். 
முகாமில் ஆதார் அட்டை, திருநங்கைகள் அடையாள அட்டை, உதவித்தொகை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு திருநங்கைகள் அதிகாரிகளிடம் மனுக்கள் வழங்கினர்.
கோரிக்கை
இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். அப்போது குமாரபாளையத்தை சேர்ந்த திருநங்கைகள் தங்களுக்கு வசிப்பதற்கு இடம் தேர்வு செய்து, வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். பாதியில் நிறுத்தப்பட்ட படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
இந்த முகாமில் திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, சமூக நல அலுவலர் கீதா, திருச்செங்கோடு தாசில்தார் கண்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story