தியாகதுருகம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் முற்றுகை


தியாகதுருகம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை மது பிரியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 10 Aug 2021 11:18 PM IST (Updated: 10 Aug 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

மது குடித்த வாலிபருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததால் ஆத்திரம் அடைந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையி்ட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கண்டாச்சிமங்கலம்

வாக்குவாதம்

தியாகதுருகம் அருகே முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில்(வயது 32). இவர் விருகாவூர் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கி அதே பகுதியில் தனது நண்பருடன் அமர்ந்து மது குடித்தார். 
அப்போது திடீரென செந்திலின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததாகவும், பாட்டிலில் இருந்த மது கலங்கிய நிலையில் தூசு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் டாஸ்மார்க் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது செந்திலுக்கு ஆதரவாக அங்கு இருந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். 

பேச்சுவார்த்தை

இதபற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், வரஞ்சரம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட மது பிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் பேசுவதாகவும், மூக்கில் ரத்தம் வந்த செந்திலை சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறினர். 
இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மதுபிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

பரபரப்பு

மது அருந்தியபோது நண்பர்களுக்கிடயே ஏதேனும் தகராறு நடந்து அதன் காரணமாக செந்திலுக்கு காயம் ஏற்பட்டு மூக்கில் இருந்து ரத்தம் வழிந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மது குடித்தபோது மூக்கீல் ரத்தம் வழிந்ததால் ஆத்திரம் அடைந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட சம்பவம் விருகாவூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




Next Story