விழிப்புணர்வு பேரணி
இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி ஒன்றியம் அ. நெடுங்குளம் கிராமத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பொதுமக்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கிராமத்தில்உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளிலும் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி வழிகாட்டுதல் படி நடைபெற்ற கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியில் வட்டார கல்வி அலுவலர்கள் ராமலட்சுமி, அங்கையற்கண்ணி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜமிலாபானு, வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள், அரியனேந்தல் கிராம நிர்வாக அலுவலர் மூகாம்பிகை, அ.நெடுங்குளம் கிராம நிர்வாக அலுவலர் அழகர் சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை ஜோதி பாப்பா, உதவி ஆசிரியை சங்கரேஸ்வரி, கிராம கல்வி குழு தலைவர் கார்த்திகேயன் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story