எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே உள்ள பொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி லெட்சுமி (வயது 54).இவர் சம்பவத்தன்று சாமி கும்பிட பிரான்பட்டியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். சாமி கும்பிட்டு கொண்டிருக்கும் போது இவர் அணிந்திருந்த நகையை யாரோ மர்ம நபர் அறுத்து கொண்டு ஓட முயற்சித்த போது லெட்சுமி கூச்சலிட்டார். உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 2 பெண்களை பிடித்து புழுதிபட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் தஞ்சாவூரை சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி செல்வி (68), பாலசுப்பிரமணியன் மனைவி சுகுணா (42) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து 2 பவுன் நகையை மீட்டனர்.