பாம்பு கடித்து மாணவி பலி


பாம்பு கடித்து மாணவி பலி
x
தினத்தந்தி 11 Aug 2021 12:48 AM IST (Updated: 11 Aug 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே பாம்பு கடித்து மாணவி பலியானார்.

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று வீட்டின் வெளியே பெற்றோருடன் சேர்ந்து ஸ்ரீநிதி இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தாள். அப்போது மாணவியை கட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது. இதில் அலறி துடித்த மாணவியை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல்சிகிச்சைக்காக மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி இறந்தாள். இதுகுறித்த புகாரின் பேரில் உலகம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story