போலி பீடிகள் பறிமுதல்; ஒருவர் கைது


போலி பீடிகள் பறிமுதல்; ஒருவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 1:36 AM IST (Updated: 11 Aug 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடையம்:
கடையம் பகுதியில் பிரபலமான பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து தனியார் பீடி நிறுவன ஊழியர்கள் கடையம் சுற்றுவட்டார பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடையம் அருகே உள்ள நெல்லையப்பபுரம் அருந்ததியர் காலனியில் உள்ள ஒரு வீட்டை பூலாங்குளத்தை சேர்ந்த துரைசாமி மகன் வேல்முருகன் (வயது 45) வாடகைக்கு எடுத்து போலி பீடிகள் தயாரித்து வந்தது தெரியவந்தது. அங்கு பல்வேறு நிறுவனங்கள் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் ரூ.1.39 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்களையும், அங்கு இருந்த பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஆதிநாராயணன் மகன் முப்புடாதி முத்து (42) என்பவரையும் கடையம் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் தனியார் பீடி நிறுவன ஊழியர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முப்புடாதி முத்துவை கைது செய்தனர். மேலும் தப்பிச் சென்ற நடுப்பூலாங்குளத்தைச் சேர்ந்த வேல்முருனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story