மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் விழுந்தவர் சாவு


மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 1:39 AM IST (Updated: 11 Aug 2021 1:39 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே மோட்டார் சைக்கிளுடன் கிணற்றில் விழுந்தவர் இறந்தார்.

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே கிராம்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 42).இவர் காளையர்கோவில் திருநகரில்‌ தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சாந்தா சகாயராணி(35) அளித்த புகாரின் பேரில் காளையார்கோவில் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் ஆண்டிச்சியூரணி விலக்கு அருகில் கிணற்றில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக தகவலின் பேரில் போலீசார் அதை கைப்பற்றி விசாரித்ததில், அது மாயமான ஆரோக்கியசாமி என தெரிய வந்தது. கிணற்றுக்குள் இருந்து அவரது மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர் சாலையோர கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.



Related Tags :
Next Story