சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர்- ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் இருந்த புளிய மரம் நேற்று காலை திடீரென சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் செல்லாததால், அதிர்ஷ்டவசமாக விபரீதம் ஏற்படவில்லை. இருப்பினும் சாலையில் மரம் விழுந்து கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி, மரம் விழுந்து கிடந்த பகுதியை கடந்து சாலையில் ஏறிச்சென்றனர். ஆனால் பஸ் மற்றும் லாரிகள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.
இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து போக்குவரத்து சீரடைந்தது. இந்த சம்பவத்தால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story