மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு குன்னம் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சிலர் மாட்டு வண்டியில் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பெருமாண்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் பாக்கியராஜ் (வயது 31), சிற்றரசு (52), நீலமேகம் மகன் பாபு (29) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 3 மாட்டு வண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story