மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது
மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி ஓடையில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் சுகன்யாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் கல்லங்குறிச்சி சறுக்கு பாலம் அருகே அந்த வழியாக வந்த டயர் மாட்டு வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் அப்பகுதி ஓடையில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி வழக்குப்பதிந்து, மணல் கடத்திய கொல்லபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் முத்தையனை(வயது 23) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story