கள்ளக்காதலன் வெட்டிக்கொலை
இரணியல் அருகே மனைவி, கள்ளக்காதலனை தொழிலாளி வெட்டினார். இதில் கள்ளக்காதலன் பரிதாபமாக இறந்தார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே மனைவி, கள்ளக்காதலனை தொழிலாளி வெட்டினார். இதில் கள்ளக்காதலன் பரிதாபமாக இறந்தார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
குமரி மாவட்டம் கீழ முட்டம் பகுதியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜான்பால் (வயது 35), மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
மேல மணக்குடியை சேர்ந்தவர் சூசைமிக்கேல் (40). இவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெனி (33). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
கள்ளக்காதல்
ஜான்பாலுக்கும், ெஜனிக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் ஜெனியை அழைத்து சென்று குடும்பம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் இரணியல் அருகே தலக்குளம் உடையார்பள்ளம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஜெனியுடன் ஜான்பால் வசித்து வந்தார்.
கொலை
இதுபற்றி அறிந்த சூசைமிக்கேல் நேற்று இரவு உடையார் பள்ளம் வந்து, ஜான் பால் வீட்டுக்குள் திடீரென புகுந்தார். பின்னர் அங்கிருந்த ஜான் பால் மற்றும் ஜெனி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக சூசைமிக்கேல் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் சம்பவ இடத்திலேயே ஜான்பால் பரிதாபமாக இறந்தார். ஜெனி படுகாயம் அடைந்தார்.
விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும், இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜான்பால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ஜெனியை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தொழிலாளியின் வெறிச்செயல் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story