ஊருக்குள் வந்த மலைப்பாம்பு பிடிபட்டது


ஊருக்குள் வந்த மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 11 Aug 2021 2:12 AM IST (Updated: 11 Aug 2021 2:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஊருக்குள் வந்த மலைப்பாம்பு பிடிபட்டது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே சிராவயல் புதூரை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் சுற்றுச்சுவர் பகுதியில் நேற்று இரை தேடி ஒரு மலைப்பாம்பு வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியில் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சடையாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சுமார் 10அடி நீளமான மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மதகுபட்டி அருகே உள்ள மண் மலை காட்டில் வனத்துறையினர் அந்த மலைப்பாம்பை விட்டனர்.

Next Story