4 கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு


4 கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 11 Aug 2021 3:03 AM IST (Updated: 11 Aug 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

4 கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு

திங்கள்சந்தை:
இரணியல் அருகே கொடுப்பைகுழி சாஸ்தாகோவில் உள்ளது. சம்பவத்தன்று மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த குத்துவிளக்கு, பூஜை பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். கீழகட்டிமாங்கோடு பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் கோவில் பூஜை பொருட்களை திருடி சென்றனர்.
இதேபோல், திங்கள்சந்தை அருகே ஞாரோடு பத்ரகாளியம்மன் கோவிலில் வெண்கலமணி, குத்துவிளக்குகள், பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் மற்றும் மணக்கரை நாராயணசாமி கோவிலில் உண்டியல் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story