மல்லூர் அருகே மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


மல்லூர் அருகே மனைவியை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 4:06 AM IST (Updated: 11 Aug 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

மல்லூர் அருகே மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சேலம்:
மல்லூர் அருகே மனைவியை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மனைவி கொலை
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள மூங்கில் ஏரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28), கூலித்தொழிலாளி. இவருக்கும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியை சேர்ந்த உமா மகேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில வாரங்களிலேயே மனைவி மீது தினேஷ்குமார் சந்தேகம் அடைந்தார்.
இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30-ந் தேதி அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் கொடுவாளால் உமா மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
திருமணமான 3 மாதங்களிலேயே இந்த கொடூர சம்பவம் நடந்தது. இந்த கொலை குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 
 இதில், மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக தினேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Next Story