வடசென்னை அனல்மின் நிலைய கால்வாயில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை


வடசென்னை அனல்மின் நிலைய கால்வாயில் பெண் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2021 2:46 PM IST (Updated: 11 Aug 2021 2:46 PM IST)
t-max-icont-min-icon

வடசென்னை அனல்மின் நிலைய கால்வாயில் பெண் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இதன் அருகில் மழைநீர் கால்வாய் செல்கிறது.

இந்த கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் மிதப்பதாக மீஞ்சூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் புகார் அளித்தார்.

அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொலை செய்து கால்வாயில உடலை வீசி விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story