காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
வடமதுரை:
குஜிலியம்பாறை தாலுகா, கூம்பூர் அருகே உள்ள ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கார் டிரைவர். இவருக்கும், ஈசநத்தத்தை சேர்ந்த சபீனா ஆஷ்மின் (19) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் திருமலைக்கேணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்பு காதல்ஜோடியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இருப்பினும் மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story