சிதறும் தேங்காய் மட்டைகளால் பதறும் வாகன ஓட்டிகள்


சிதறும் தேங்காய் மட்டைகளால் பதறும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 11 Aug 2021 9:56 PM IST (Updated: 11 Aug 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு 4 வழிச்சாயைில் சிதறும் தேங்காய் மட்டை களால் வாகன ஓட்டிகள் பதறும் நிலை ஏற்பட்டு உள்ளது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு 4 வழிச்சாயைில் சிதறும் தேங்காய் மட்டை களால் வாகன ஓட்டிகள் பதறும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

தென்னை நார் உற்பத்தி 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தென்னைநார் உற்பத்தி மையம் உள்ளது. 

இந்த மையத்தில் தயாரிக்க தேவைப்படும் தேங்காய் மட்டைகள் கிணத்துக்கடவு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதி களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது. 

இவ்வாறு தேங்காய் மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங் களில் வலை போட்டு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லவில்லை என்றால், சாலைகளில் தேங்காய் மட்டைகள் விழுந்து சிதறிவிடும்.

சிதறும் தேங்காய் மட்டைகள்  

ஆனால் வாகனங்களில் அவ்வாறு கொண்டு செல்லப்படுவது இல்லை. இதன் காரணமாக கிணத்துக்கடவில் உள்ள 4 வழிச்சாலையில் ஆங்காங்கே தேங்காய் மட்டைகள் சிதறி கிடக்கின்றன. 

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகத்தில் செல்கின்றன. இந்த நிலையில் ஆங்காங்கே தேங்காய் மட்டைகள் சிதறி கிடப்பதால் அதன் மீது வாகனங்கள் ஏறி செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து பலியாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

பதறும் வாகன ஓட்டிகள் 

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்புவரை தேங்காய் மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வலைபோட்டு செல்லவில்லை என்றால் அபாராதம் விதிக்கப்பட்டது. தற்போது அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்பதால், தேங்காய் மட்டைகள் ஏற்றிச்செல்லும் அனைத்து வாகனங்களும் வலைபோடுவது இல்லை. 

இவ்வாறு சிதறி கிடக்கும் தேங்காய் மட்டைகளால் வாகன ஓட்டிகள் பதறும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே தேங்காய் மட்டைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் வலை போடவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story