58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கள்ளர் கூட்டமைப்பினர் போராட்டம்
வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி கள்ளர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் செல்கிறது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் வைகை அணை பூங்கா பகுதிக்கு கள்ளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்த சிலர் வந்தனர். அப்போது அவர்கள் பூங்கா நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது, 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி அவர்கள் கோஷமிட்டனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story