மன்னார்குடி ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தகவல்


மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம்
x
மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம்
தினத்தந்தி 11 Aug 2021 10:42 PM IST (Updated: 11 Aug 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் கூறினார்.

மன்னார்குடி:-

மன்னார்குடி ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் கூறினார். 

ஒன்றியக்குழு கூட்டம்

மன்னார்குடியில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- 
பாரதிமோகன் (தி.மு.க.):- சேரன்குளம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வட்டார மைய கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இதை புதுப்பித்து தரவேண்டும். தற்போது தற்காலிக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருவதால் புதிதாக ஊட்டத்து மையத்திற்கு கட்டிடம் கட்ட வேண்டும். 
குமரேசன் (தி.மு.க.):- சித்திரையூர் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் ஒரு வீட்டில் இயங்கி வருகிறது. அக்கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விவசாயிகளுக்கு உரம்

கோவில்வினோத் (அ.தி. மு.க.):- விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வினியோகிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு உரங்களை உடனடியாக வழங்க வேண்டும். 
செல்வம் (பா.ஜனதா):- பரவாக்கோட்டை பகுதிக்கு எந்த ஒரு புதிய வேலையும் தரப்படவில்லை. மக்கள் தொகை முன்னுரிமை அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்படவேண்டும். அங்குள்ள சித்த மருத்துவ கட்டிடம் பழுதடைந்து உள்ளது. வீடு கட்டி தருவதில் பயனாளிகளை அலைக்கழிக்க கூடாது. 

சாலை மேம்பாட்டு பணிகள்

பூபதி மாரியப்பன் (இந்திய கம்யூனிஸ்டு):- மஞ்சனவாடி ஜீவா தெருவுக்கு புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்
ஜெயந்தி (தி.மு.க.):- பாலக்குறிச்சிக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும். மனோகரன் (தலைவர்):- தென்கோவனுர், இடையர்நத்தம், பைங்காநாடு, ஏத்தக்குடி, காரிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, பூந்தாலங்குடி, பருத்திக்கோட்டை, வடபாதிமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள பழைய கட்டிடங்களை இடிக்க உத்தரவு வந்து உள்ளது. அதன் பிறகு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்ககொள்ளபடும். சாலை மேம்பட்டுக்காக ரூ.5 கோடியே 52 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. 

Next Story