கடலில் விழுந்து மீனவர் சாவு


கடலில் விழுந்து மீனவர் சாவு
x
தினத்தந்தி 11 Aug 2021 11:32 PM IST (Updated: 11 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

கடலில் விழுந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.

கீழக்கரை, ஆக.
கீழக்கரை அருகே உள்ள மங்களேஸ்வரி நகரை சேர்ந்தவர் மீனவர் பால்சாமி (வயது 60). இவர் நேற்று காலை மீன் பிடிப்பதற்காக தெர்மாகோல் மிதவையில் மிதந்து தனியாக கடலுக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பகல் உணவுக்கு வீடு திரும்பவில்லை என்றதும் அவரது உறவினர்கள் கடற்கரைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் சிறிய படகின் அருகில் கழுத்தில் கயிறு சுற்றி கடலில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் கீழக்கரை மரைன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், தலைமை காவலர் ஆனந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பால்சாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story