வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை


வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2021 6:18 PM GMT (Updated: 11 Aug 2021 6:19 PM GMT)

வீடு, வீடாக காய்ச்சல் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை.

குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி உள்ளதா? என்று கணக்கெடுக்க 120 ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் வீடு, வீடாக சென்று மக்களின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, காய்ச்சல், சளி, இருமல், சோர்வு போன்ற அறிகுறிகள் உள்ளதா என்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அறிகுறிகள் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். இதனால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அந்த ஊழியர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கக்கோரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறும்போது, கொரோனா கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பள மதிப்பீடு, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. 

தற்போது புதிய ஆணையாளர் பொறுப்பேற்று உள்ளார். எனவே விரைவாக சம்பள மதிப்பீடு மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story