பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தொண்டர் மயங்கி விழுந்து சாவு
பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கிவிழுந்து இறந்தார்.
பேரணாம்பட்டு
தி.மு.க. ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பக்காலப்பல்லி கிராமத்தில் பேரணாம்பட்டு கிழக்கு, மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து, பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய செயலாளர் ெபாகளூர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலு, வில்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள மசிகம் கிராமம் எம்.ஜிஆர.் நகரைச் சேர்ந்த தி.மு.க. கிளை பிரதிநிதி சவுந்தர் (வயது 56) என்பவரும் கலந்துகொண்டார். கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது சவுந்தர் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறினார்.
மயங்கிவிழுந்து சாவு
சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த நிர்வாகிகள் அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து சவுந்தர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இச்சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்த அமைச்சர் காந்தி, மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனடியாக இறந்த சவுந்தர் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மனைவி சுமதி, மகள் செண்பகத்திற்கு ஆறுதல் கூறினர்.
அப்போது, எம்.எல்.ஏ.க்கள் அமலு, வில்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட் நகர தி.மு.க. செயலாளர் ஆலியார்ஜூபேர் அஹம்மத் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story