வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு மேற்ெகாண்டார்.
விருதுநகர்,
விருதுநகர் நாராயணமடம்தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த எந்திரங்களை கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார். அங்கு 1,600 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 3,000 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் ஆக மொத்தம் 4,600 வாக்குப்பதிவு எந்திரங்களை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்பு கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story