மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை


மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 12 Aug 2021 1:27 AM IST (Updated: 12 Aug 2021 1:27 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே தொழிலாளியை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

சேலம்
தேவூர் அருகே தொழிலாளியை கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தொழிலாளி
சேலம் மாவட்டம் தேவூர் அருகே டி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி என்கிற குணசேகரன் (வயது 40), கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி சுமதி (33). கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள ஒரு விவசாயியின் தோட்டத்தில் பாதி புதைக்கப்பட்ட நிலையில் குணசேகரன் உடல் கிடந்தது.
அவரது சாவு குறித்து அப்போதைய தேவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கள்ளக்காதல்
விசாரணையில், சுமதிக்கும் டி.புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னதம்பி (23) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதற்கு இடையூறாக குணசேகரன் இருந்ததால் அவரை கொலை செய்ய சுமதி, கள்ளக்காதலன் இருவரும் திட்டம் தீட்டினர்.
அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 28-ந் தேதி சுமதி, கள்ளக்காதலன் சின்னதம்பி, அவருடைய நண்பர் புவனேஸ்வரன் (23) ஆகியோர் குணசேகரனை கொலை செய்து விவசாய தோட்டத்தில் புதைத்தது தெரியவந்தது.
ஆயுள் தண்டனை
இதையடுத்து சுமதி, சின்ன்தம்பி, புவனேஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 3-வது அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி கணவரை கொலை செய்த குற்றத்திற்காக அவரது மனைவி சுமதி, கள்ளக்காதலன் சின்னதம்பி, புவனேஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு அளித்தார். மேலும் சுமதிக்கு 5 ஆயிரமும், சின்னதம்பிக்கு ரூ.10 ஆயிரமும், புவனேஸ்வரனுக்கு ரூ.8 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Next Story