மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:34 AM IST (Updated: 12 Aug 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தூர், 
சாத்தூர் ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அழகுராணி, மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ரெயில் பயண உரிமைகள், கட்டணச்சலுகைகள் மற்றும் தனி பெட்டி உள்ளிட்ட வசதிகளை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சுந்தரபாண்டியன் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தார்.


Next Story