காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை


காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2021 2:50 AM IST (Updated: 12 Aug 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

தாவணகெரே அருகே, காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் நடந்து உள்ளது.

சிக்கமகளூரு: தாவணகெரே அருகே, காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் நடந்து உள்ளது.

காதலி மறுப்பு

தாவணகெரே டவுன் லெனின்நகர் பகுதியில் வசித்து வந்தவர் மகாந்தேஷ்(வயது 24). இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மகாந்தேசுக்கும், ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் வீட்டிற்கும் தெரியவந்தது.

ஆனால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகாந்தேசுடன் பேசுவதை அவரது காதலி தவிர்த்து வந்து உள்ளார். இந்த நிலையில் காதலியை சந்தித்த மகாந்தேஷ் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளுவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு காதலி மறுத்து விட்டதாக தெரிகிறது. 

ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மகாந்தேஷ், நண்பர்களிடம் தனது காதல் தோல்வி அடைந்ததாக கூறி வருத்தப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு நண்பர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மகாந்தேஷ் நேற்று காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது தாவணகெரே அருகே கெரூர் கிராமத்தின் வழியாக செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் மகாந்தேஷ் இறந்து கிடப்பது தெரிந்தது. இதனால் அங்கு சென்ற உறவினர்கள் மகாந்தேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர். 

சம்பவம் பற்றி அறிந்த தாவணகெரே ரெயில்வே போலீசார் அங்கு சென்று மகாந்தேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் ரெயில் முன்பு பாய்ந்து மகாந்தேஷ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து தாவணகெரே ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story