மூதாட்டி பலாத்காரம்; தொழிலாளி கைது


மூதாட்டி பலாத்காரம்; தொழிலாளி கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 8:12 AM IST (Updated: 12 Aug 2021 8:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை  சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா (வயது 23) என்பவர் அங்கு வந்தார். 

மூதாட்டி தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவர் வீட்டுக்குள் சென்று மிரட்டி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார். மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வருவதற்குள் ஜீவா அங்கிருந்து ஓடி விட்டார்.

இதையடுத்து அவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story