வாணியம்பாடியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது- 11 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் பறிமுதல்
வாணியம்பாடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 11 பவுன் நகை, 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்த மாமலைவாசன் மற்றும் ராமநாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர் வீடுகளில் திருட்டு நடைபெற்றது.
இதுகுறித்து அம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தும்பேரி கூட் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்தவழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்கள் நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வாணியம்பாடி, மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது28), சிக்கனாங்குப்பம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (19), காமேஷ் (19), வினோத் குமார் (19) என்பதும் என்பதும், நண்பர்களுடன் சேர்ந்து அம்பலூர் மற்றும் ராமநாயக்கன் பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது.
அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அரபாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (24), பசுபதி (24), முரளி (26), புத்துகோவில் பகுதியை சேர்ந்த லோகு (19) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 பவுன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story