கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவு: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது


கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவு: பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 1:43 PM IST (Updated: 12 Aug 2021 1:43 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் ஜாமீனில் வந்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த ரவுடி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பூர், 

சென்னை தண்டையார்பேட்டை, திலகர் நகர், அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுமதி (வயது 45). இவருடைய கணவர் ரவி, தண்டையார்பேட்டையில் பிரியாணி கடை நடத்தி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு மாமூல் தர மறுத்ததால் ரவியை அதே பகுதியை சேர்ந்த ரவுடி ரேடியோ விஜய் என்ற விஜய் (39) வெட்டிக்கொலை செய்தார்.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த விஜய், வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இதற்கிடையில் கோர்ட்டில் ஆஜராகி சாட்சி சொன்னால் உன்னையும் தீர்த்துக்கட்டி விடுவேன் என தனக்கு விஜய் கொலை மிரட்டல் விடுத்ததாக தண்டையார்பேட்டை போலீசில் சுமதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த ரவுடி விஜயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story