மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயம்


மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதல்: 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:49 PM IST (Updated: 12 Aug 2021 1:49 PM IST)
t-max-icont-min-icon

மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியதில் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர் படுகாயமடைந்தார்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரிக்கல் டெக்னீஷியனாக வேலை செய்து வருகிறார். இரவு பணி முடிந்து நேற்று காலை கம்பெனியில் இருந்து வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

பட்டாபிராம் அடுத்த நெமிலிச்சேரி அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் வந்தபோது, தூக்க கலக்கத்தில் இருந்ததால் மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக வானகரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story