இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வீரபாண்டி
திருப்பூர் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட பல வஞ்சிபாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கொரோனா தொற்று நோய் பரவலின் காரணமாக பல வஞ்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுவரை அப்பகுதி பொதுமக்களுக்கு 600 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும், மற்ற நபர்களுக்கு தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்புவதாகவும் இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வீரபாண்டி நான்காம் மண்டல பொறுப்பாளர் சி.அருணாச்சலம் தலைமையில் மாநகராட்சி கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அருணாச்சலம் கூறும்போது பல வஞ்சிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் விரைவாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசியை வழங்கிட சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார். ஆர்ப்பாட்டத்தில் 4ஆம் மண்டல செயலாளர் வடிவேல், வீரபாண்டி கிளைச் செயலாளர் பாரதி, மேற்கு கிளை செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
---
Image1 File Name : 5617631.jpg
----
Reporter : R. Balasubramanian Location : Tirupur - Veerapandi
Related Tags :
Next Story