752 பேருக்கு சிகிச்சை
திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 752 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 752 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம்
பொதுமக்கள் தங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்வார்கள். ஒரு சிலர் அருகில் உள்ள மருந்தகங்கள் மருந்து, மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் தொடங்கிவைக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி மருத்துவ உதவி தேவைப்படுகிறவர்கள் தொடர்புகொண்டால், அவர்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகள் செய்யப்படுகிறது. இதற்கு என 25 குழுக்களும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
752 பேருக்கு சிகிச்சை
இந்த குழுவினர் தங்களுக்கு வருகிற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு செல்கிறார்கள். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களினால் அவதிப்படுகிறவர்கள் குறித்து விவரங்களையும் இந்த குழுவினர் சேகரிக்கிறார்கள். தொடர்ந்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்து, அவர்களை அனுப்பிவைக்கிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 752 பேருக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொதுமக்கள் பலரும் ஆர்வமாக இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அரசு திட்டங்களை தேவைப்படுகிற அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-------
Related Tags :
Next Story