இளம்பெண்ணின் போட்டோக்களை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கைது
காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் போட்டோக்களை ‘மார்பிங்’ செய்து வெளியிடுவதாக மிரட்டிய குடியாத்தம் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி
காதல் மலர்ந்தது
குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்தவர் சூர்யா வெங்கடேஷ் (வயது 25). டெல்லியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காட்பாடியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சென்னை ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் ஒரு கலைநிகழ்ச்சியில் சந்தித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண், சூர்யா வெங்கடேசிடம் பேசுவதை நிறுத்திவிட்டு காதலிக்க மறுத்தார்.
கொரோனா காரணமாக சூர்யா வெங்கடேஷ் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அவர் இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேசவும், காதலிக்க வேண்டும் என வலியுறுத்தி னார். இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
போட்டோக்களை மார்பிங் செய்து...
தொடர்ந்து இளம்பெண் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த சூர்யா வெங்கடேஷ் இளம்பெண்ணின் போட்டோக்களை ‘மார்பிங்’ செய்து வாட்ஸ் அப், பேஸ்-புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இந்த சம்பவம் குறித்து காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யா வெங்கடேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story